ஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு!

ஆதார் எண்ணை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

சர்ச்சையில் சிக்கிய சர்மா

அண்மையில் தனது ஆதார் எண்ணை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, முடிந்தால் இதனைப் பயன்படுத்தி தனக்கு பாதகத்தை ஏற்படுத்திக் காட்டுங்கள் என சாவல் விடுத்தார். அடுத்த ஒருசில நிமிடங்களில் அவரின் சாதகத்தையே வெளியிட்டு மூக்கை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவெளியில் ஆதார் எண்ணை வெளியிட்ட சர்மாவின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்

பதவி நீட்டிப்பு

இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நியமனங்களுக்கான மந்திரி சபைகள் கூட்டத்துக்கு பின் இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வரம்பு மீறிய முடிவு

முன்னாள் வர்த்தகத்துறை செயலாளர் ரீட்டா டியோட்சியா இந்த பதவிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற இருந்த சர்மாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

R S Sharma Re Appointed As TRAI Chairperson Till 2020