தொடர்ந்து 3வது காலாண்டாக நட்டத்தினைப் பதிவு செய்த எஸ்பிஐ..!

எஸ்பிஐ வங்கியின் 2018-2019 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக எஸ்பிஐ வங்கி நட்டம் அடைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் எஸ்பிஐ வங்கி 2,005.53 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்து இருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 4,875.85 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளது. ப்ளும்பெர்க் 237.80 கோடி ரூபாய் லாபம் பெறும் என்று கணித்து இருந்தது.

வாரா கடன்

சென்ற ஆண்டு இதே காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் வாரா கடன் சொத்துக்கள் அளவு 1.88 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 13.17 சதவீதம் அதிகரித்து 2.13 டிரில்லியன் டாலராக உள்ளது.

கடன் வருவாய்

கடன் வழங்கியதன் மூலம் எஸ்பிஐ வ் அங்கி பெற்ற வருவாய் சென்ற ஆண்டி முதல் காலாண்டில் 17,606.07 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 23.8 சதவீதம் உயர்ந்து 21,798.36 கோடி ரூபாயாக உள்ளது.

பிற வருவாய்

பிற வருவாய்கள் சென்ற ஆண்டு 8005.66 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 6679.49 கோடி ரூபாய் என 16.57 சதவீதம் சரிந்துள்ளது.

இயக்க லாபம்

எஸ்பிஐ வங்கியின் இயக்க லாபமானது சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 11,874 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு ந் இதி ஆண்டில் 0.83 சதவீதம் உயர்ந்து 11,973 கோடி ரூபாயாக உள்ளது.

செலவு அதிகரிப்பு

சென்ற ஆண்டு ஊழியர்களுக்குச் செலவானதை விட இந்த ஆண்டுக் கிராஜூவிட்டி, ஊதியம் உயர்வு போன்ற காரணங்களினால் செலவுகள் அதிகரித்துள்ளது.

டெபாசிட்

சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 26,02,534 கொடி ரூபாயினை டெபாசிட்டாக எஸ்பிஐ வங்கி பெற்று இருந்த நிலையில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5.58 சதவீதம் அதிகரித்து 27,47,813 கோடி ரூபாய் டெபாசிட்டினை பெற்றுள்ளது.

பங்குகள் நிலை

எஸ்பிஐ வங்கியின் காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு 2:44 மணியளவில் 5.30 புள்ளிகள் என 1.88 சதவீதம் சரிந்து 310.50 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

SBI Q1 Result Says Third Consecutive Quarter Loss On Surging NPAs