உதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு!

கோவில் நகரங்களான கர்நாடகா, பீகார் மற்றும் அவுரங்காபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்த மாதம் முதல் உதான் திட்டத்தின் கீழ் விமானச் சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உதான் விமானச் சேவையினைத் துவங்கி வைத்த ஓடி அவர்கள் ஹவாய் செறுப்பு போட்டவர்களும் விமானப் பயணம் செய்ய வேண்டியதே எனது நோக்கம் என்று தெரிவித்து இருந்து அனைவருக்கு நினைவிருக்கும்.

3 வது கட்ட திட்டம்

குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் உதான் திட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூன்றாவது கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள ஹம்பி, பீகாரில் உள்ள மகாபோதி ஆலயம் மற்றும் எல்லோரா, அஜந்தா குகைக்கோவில்களைக் கொண்ட அவுரங்காபாததுககு அடுத்த மாதம் முதல் விமானச் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒப்பந்தப் புள்ளி

உதான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விமானச் சேவைக்கான வழித்தடம் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி செப்டம்பர் மாதம் பெறப்பட்டு, அக்டோபர் மாதம் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கட்டண நிர்ணயம்

விமான நிறுவனங்கள் அளிக்கும் சலுகை விலை கட்டணங்களை அரசு அனுமதிக்கிறது. ஒரு மணிநேர பயணத்துக்கான 50 சதவீத இருக்கைகளுக்கு 2500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. விமான நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்டும் வகையில் நம்பக நிதியுடன், மானியம் வழங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

630 வழித்தடங்களில் உதான்

உலங்கு ஊர்தி உள்பட 630 வழித்தடங்கள் உடன் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. புனே, டெல்லி, மும்பை உள்ளிட்ட வழித்தடங்கள் உதான் திட்டத்தின் கீழ் வராது. இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய வழித்தடங்களைக் கொண்டுள்ளன.

பிராந்திய இணைப்பின் குறிக்கோள்

நம்ப முடியாத இடங்களுக்கு விமானச் சேவையை வழங்குவதே உதான் திட்டத்தின் நோக்கமாகும். முக்கிய வழித்தடங்களில் இயக்கும் விமான நிறுவனங்களிடம் இருந்து 5000 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

UDAN scheme Phase 3 Likely To Begin Next Month