12,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை சேமிக்கும் மோடியின் அதிரடி திட்டம்!

சென்ற ஆண்டுப் பெட்ரோலில் எத்தானாலினை சேர்த்துப் பயன்படுத்தியதை அடுத்து இந்திய அரசுக்கு அந்நிய செலாவணியில் 4,000 கோடி ரூபாய் வரை சேமிப்புக் கிடைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களில் எத்தனாலினை சேர்ப்பதன் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும் உலக உயிரி எரிபொருள் தினத்தன்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடி உரை

விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய மோடி எத்தனாலை பெட்ரோலிய பொருட்களில் சேர்ப்பதன் மூஅம் அந்நிய செலாவணி மட்டும் இல்லாமல் சுற்று சூழலுக்குப் பாதுகாப்பானது என்று கூறியுள்ளார்.

எத்தனால்

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களில் 2022-ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அளவிலான எத்தனாலினை சேர்த்துப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

விவசாயி & வேலை வாய்ப்பு

பையோ ஃபியூல் எனப்படும் உயிரி எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருவாயினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் மோடி கூறியுள்ளார்.

எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு

மத்திய அரசு 2013-2014 நிதி ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனாலினை பெட்ரோலிய பொருட்களைப் பயன்படுத்திய நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 141 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பையோ ஃபியூலுக்கான தேசிய கொள்கையினை 2018 ஜூன் மாதம் இயற்றியுள்ளது என்றும் மோடி நினைவு கூர்ந்தார்.

பையோ ஃபியூல் தினமானது

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பையோ ஃபியூல் தினமானது ஆகஸ்ட் 10 தேதி நடைபெறுகிறது. இதன் மூலம் உலகம் முழுவது உயிரி எரிபொருளினை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.

இலக்கு

2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய பொருட்களில் 20 சதவீதம் வரை எத்தனாலினை பயன்படுத்த முடிவு செய்துள்ளது மட்டும் இல்லாமல் 5 சதவீதம் வரை பையோ டீசல் பயன்பாட்டினை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்குப் பையோ ஃபியூள் கொள்கை முக்கியப் பங்கினை வகிக்கும்.

Have a great day!
Read more...

English Summary

World Biofuel Day 2018: Modi Govt To Save Rs 12,000 Crore In Forex By Next 4 years. How?