டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சி.. யெஸ் பேங்குக்கு விருது!

இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது தனியார் வங்கியான எஸ் பேங்க், டிஜிட்டல் கொடுப்பனவில் ஆதிகம் செலுத்தி வருவதை அடிப்படையாகக் கொண்டு, 2018 ஆண்டுக்கான தொழில் நுட்ப திட்ட விருதுக்கு நேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தொழில்நுட்ப திட்ட விருது

Advertisement

லண்டனைச் சேர்ந்த தி பேங்கர் என்ற உலகளாவிய நிதி நிறுவனம் எஸ் பேங்கின் தொழில்நுட்ப வளர்ச்சியை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய எஸ் பேங்கின் தலைமை செயல் அதிகாரி ரானா கபூர், முறைகேடுகளுக்கு வழியில்லாத வகையில் பணப்பரிவர்த்தனைகள் டிஜிடடல் மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் சேவையில் மேம்படுத்துவதில் பிற வங்கிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதாகக் கூறினார்.

கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள்

கார்ப்ரேட் வாடிக்கையாளர்களின் நிதி வழங்கல் தொடர்ச்சியைத் தனித்துவமாக மாற்றியுள்ளதாகக் கபூர் கூறினார். பயன்பாடு மற்றும் புதுமைகளை அறிந்து உலகளவில் 200 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட டிஜிட்டல் முறையைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

English Summary

Yes Bank bags global award
Advertisement