பாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..?

கடந்த 10 ஆண்டுகளாக மிக வேகமாகப் பொருட்களைச் சந்தைப்படுத்தி இந்தியாவின் மிகப்பெரிய எப்எம்சிஜி நிறுவனமாக வளர்ந்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு யோகா போல ஒரே தளத்தில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாமல் நின்று கொண்டு பல சறுக்கல்களையும் சந்தித்து வருகிறது.

விலை போகாத பதஞ்சலி

அடுத்த மூன்று ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி வரை விற்பனையை எதிர்பார்த்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் கூறியது. கடந்த நிதி ஆண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் விற்று முதல் பெற்றுள்ளது. கிரீடிம் சுஸ்சேயின் ஆய்வின்படி, பதஞ்சலியின் பற்பசை, நெய், தந்த்காந்தி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவில் விலைபோகவில்லை என்று தெரிவித்துள்ளது.

புத்துயிர் ஊட்டாத பிராண்ட்கள்

2017 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பற்றாக்குறையை 27 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை பதஞ்சலி தீர்த்து வைத்தது. ஆரம்பக் காலத்தில் ஆயுர்வேதத்தால் ஈர்க்கப்பட்ட பதஞ்சலியின் பிராண்டுகள், மற்றும் விலை மதிப்புகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர மறந்ததால், விற்பனை தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது.

விநியோகத்தில் இயலாமை

சொந்த நெட்வொர்க்கான சிக்டிசலயாஸ் மூலம் தனது தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் ஹிந்துஸ்தான் லிவர், கோல்கேட் போன்ற நிறுவனங்களை விஞ்சிவிட்டதாகவும் கருதிக்கொண்டது.ஆனால் உண்மை வேறு மாதிரியாக அமைந்தது. 2016 இல் பதஞ்சலி 2 லட்சம் சில்லறை அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்துஸ்தான லிவர் தயாரிப்புகள்எ 60 லட்சம் கடைகளிலும், கோல்கேட் 40 லட்சம் கடைகளிலும், நெஸ்லே 35 லட்சம் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டதன். இதில் பதஞ்சலியின் சிக்கிட் சலயாஸ் அங்காடிகளை விரிவுபடுத்துவதில் கோட்டை விட்டது.

நீர்த்துப் போகச் செய்யும் வணிக முயற்சி

பதஞ்சலி ஒரு ஆயுர்வேத தயாரிப்புகளின் பிராண்டாக அறியப்படுகிறது. மூலிகை மற்றும் கரிம உணவுத் தயாரிப்புகளை மேற்கொண்ட அந்த நிறுவனம், பிஸ்கட் மற்றும் நூடுல்ஸ் போன்ற பொருட்களையும் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறது. தற்போது ஆடை மற்றும் உறைந்த காய்கறி விற்பனையைத் தொடங்க முயற்சி எடுத்துள்ளதால், ஆயுர்வேதம் என்ற பிரத்தியேகமான சிறப்பு நீர்த்துப்போகிறது- ஆடை, உறைந்த காய்கறியில் ஆயுர்வேதத்தைச் சேர்க்க முடியாது.

வலுவான போட்டியில் பின்னடைவு

கோல்கேட், ஹல் போன்ற நிறுவனங்கள் இயற்கை முறையிலான பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் தங்களுக்கான போட்டியை துரிதப்படுத்தியுள்ளது. அவை தேசிய அளவிலான விற்பனையை விரிவுபடுத்துவதால், பதஞ்சலிக்குப் பின்னடைவு உருவாகியுள்ளது.

விளம்பர வீழ்ச்சி

விளம்பரங்கள் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றவோ, தக்க வைக்கவோ பதஞ்சலியால் இயலவில்லை. எக்சேஞ்ச் மீடியா வுழங்கியிருக்கும் புள்ளி விவரத்தில், பார்க்கின் டாப் 10 பட்டியலில் பதஞ்சலி இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. சில நேரங்களில் 5 மற்றும் 10 வது இடங்களுக்கு வந்ததாகக் கூறியுள்ளது.

ஊடக முனைப்பில் தொய்வு

ஊடக விளம்பரங்களில் பதஞ்சலியின் அம்பாசட்டரான பாபா ராம்தேவ் தீவிரமானவர். ஆனால் ஊடக கவனிப்பில் பதஞ்சலிக்கு ஆரோக்கியமான இடம் கிடைக்கவில்லை. குறைந்த அளவிலான வெளிப்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Yoga pause? Baba Ramdev's Patanjali is caught in 6 body locks