இந்திய பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா சுதந்திர தின சலுகையாக விமான டிக்கெட்களுக்குக் கவர்ச்சிகரமான தள்ளுபடியை அளிக்க உளதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் airindia.in என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் புக் செய்யும் இந்தத் தள்ளுபடி கிடைக்கும்.
சலுகை
சலுகை
ஏர் இந்தியாவின் இந்தத் தள்ளுபடி விற்பனை கீழ் 2018 ஆகஸ்ட் 15 வரை டிக்கெட்கள் புக் செய்யலாம். இந்தச் சலுகைகள் இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கிடைக்கும்.
எப்படித் தள்ளுபடி பெறுவது?
எப்படித் தள்ளுபடி பெறுவது?
சுதந்திர தின சலுகையாக ஏர் இந்தியா இந்தச் சலுகையினை வழங்கும் நிலையில் ‘18INDAY' என்ற குறியீட்டினை உள்ளிட வேண்டும்.
எவ்வளவு டிக்கெட்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும்?
எவ்வளவு டிக்கெட்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும்?
குறைந்த காலச் சலுகை என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எவ்வளவு டிக்கெட்கள் கிடைக்கும் என்று விவரங்களை விளக்கமாக அளிக்காததும் குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
பிற நிறுவனங்கள்
ஏர் இந்தியா மட்டும் இல்லாமல் போட்டி விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, கோஏர் நிறுவனங்களும் தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்களை வழங்கி வருகின்றன.