வணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..!

மத்திய அரசு 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரியைத் தாக்கல் செய்யாவதற்கான தேதியை 11 ஆக மாற்றியுள்ளது.

தற்போது இது போன்ற வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர் 1 தாக்கலினை ஒவ்வொரு மாதமும் 10-ம்தேதி செய்ய வேண்டும். ஆனால் இன்று மத்திய மறைமுக வரி வாரியமானது வெளியிட்ட அறிக்கையில் ஜூலை 2018 முதல் மார்ச் 2019 வரையிலான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய 11 தேதியாக மாற்றியுள்ளனர்.

காலாண்டு ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர்கள்

ரூபாய் 1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டின் அடுத்த மாத இறுதிக்குள் ஜிஎஸ்ச்டிஆர் 1 வரியினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் காலாண்டுக்கான ஜிஎஸ்டி

எனவே மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டிற்கான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

மூன்றாம் காலாண்டுக்கான ஜிஎஸ்டி

இதுவே அக்டோபர் - டிசம்பர் மாத காலாண்டிற்கான ஜிஎஸ்டி வரியினை 2019 ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்க செய்ய வேண்டும்.

நான்காம் காலாண்டுக்கான ஜிஎஸ்டி

2019 ஜனவரி முதல் மார்ச் வரையிலான வரியினைத் தாக்கல் செய்ய 2019 ஏப்ரல் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டிஆர்-3பி

2018 ஜூலை முதல் 2019 மார்ச் வரை ஒவ்வொரு மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி விற்பனை அறிக்கையினை அடுத்த மாத 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Central Board of Indirect Tax Notifies Due Date For Filing GST Returns From July'18 to March'19 Changed