அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடிக்குத் தடை - விரைவில் தொடங்குகிறது விசாரணை!

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பே.டி.எம் உள்ளிட்ட ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனைக்கு எதிராகப் புகார்கள் குவிந்து வருவதால், அதன் மீது ஒழுங்குமுறை பொறுப்பானமை குழு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

கண்காணிப்பு

சலுகைகளைக் காட்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆன் லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் நடவடிக்கையை இந்திய போட்டி ஆணையம் கண்காணித்து வருகிறது. பிளிப்கார்ட்டை 16 பில்லியன் டாலருக்கு வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்கும் ஒப்பந்தத்துக்குப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்தும், தள்ளுபடி புகார்கள் மீது விசாரணை நடத்த வசதியாக ஒழுங்குமுறை பொறுப்பாண்மை குழு நிறுத்தி வைத்துள்ளது.

சலுகைகளுக்குத் தடை

2016 மார்ச் மாதம் அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் நூறு சதவீதம் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர தடைசெய்திருந்தது.

70 விழுக்காடு தள்ளுபடி

ஆனால் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பே,.டி.எம மால் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. ஸ்மார்ட் போன்கள், புத்தகங்கள், ஆடைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 70 சதவீதத்துக்கு அதிகமாகத் தள்ளுபடி வழங்கியுள்ளன. ஆனால் இவை 3 ஆம் தரப்பு விற்பனையாளர்களால் தள்ளுபடி செய்யப்படும் என அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் தெரிவித்துள்ளன

குற்றச்சாட்டுக்கள்

அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் விலைக்குறைப்பை சிறிய வர்த்தகர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்திய வர்த்தகச் சங்கங்களின் தலைமையிலான வர்த்தகர்கள் தள்ளுபடி விலை அறிவிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளனர். சந்தையில் குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வணிகத்திலிருந்து வணிகம்

பிளிப்கார்ட் நிறுவனம் வணிகத்திலிருந்து வணிகம் என்ற வியாபார உத்தியைப் பயன்படுத்துகிறது. ஆன்லைன் சந்தையிலும், வணிகத்திலிருந்து வணிகப் பிரிவிலும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதில் கணிசமான வர்த்தகர்கள் பயன்பெறுவதை மறுக்க முடியாது எனப் போட்டிகள் ஆணையம் கூறியுள்ளது.

விதிமுறை மீறல்

அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தற்போதைய விதிமுறைகளைப் பிளிப்கார்ட் அமேசான் போன்ற நிறுவனங்களை அப்பட்டமாக மீறுவதாக வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அமலாக்கப்பிரிவு இதன் மீது கவனம் செலுத்தவோ, விசாரணை நடத்தவோ இதுவரை முன்வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வீணாய்ப் போன விசாரணை

நேரடி அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதாக 2013 ஆம ஆண்டுப் பிளிப்கார்ட், ஸ்னாப் டீல், மற்றும் மிந்த்ரா உள்ளிட்ட ஆன் லைன் நிறுவனங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை . இந்தக் குற்றச்சாட்டுகள், நடவடிக்கை குறித்து விசாரணை அமைப்புகளோ, பிளிப்கார்ட், வால்மார்ட நிறுவனமோ மின்னஞ்சல்களுக்குப் பதில் அளிக்க மருதது விட்டது.

Have a great day!
Read more...

English Summary

Heavy discounts by Flipkart, Amazon, Paytm Mall: Regulatory probe likely