செப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் கிடையாது.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..!

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 2018 செப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் வழங்ப்பட மாட்டாது என்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு முதல் ரயில் பயணிகளுக்கான இன்சூரன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

பயண இன்சூரன்ஸ்

ஐஆர்சிடிசி இலவச பயண இன்சூரன்ஸினை ரத்து செய்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பயண இன்சூரன்ஸ் திட்டத்திற்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு ரயில் பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

யாருக்கெல்லாம் பயண இன்சூரன்ஸ் கிடைக்கும்?

ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் புக் செய்யும் போது மட்டும் தான் இந்த இன்சூரன்ஸ் வழங்கப்படும். அதுவும் வேண்டும் என்றால் தேர்வு செய்யலாம்.

எவ்வளவு கூடுதல் செலவாகும்?

ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பயண இன்சூரன்ஸ்க்காக வெறும் 90 பைசா மட்டுமே கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ லம்பார்டு, ஸ்ரீராம் இன்சூரன்ஸ் உள்ளிட்டோர் காப்பீடுகளை வழங்குகின்றனர்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிட்ஜிட்டல் முறையில் ரயில் டிக்கெட் புக் செய்வதை ஊக்குவிக்க ஐஆர்சிடிசி இலவசமாகப் பயண இன்சூரன்ஸ் திட்டத்தினை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Indian Railways: No free travel insurance in trains from Sept 1