74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..!

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி கடந்த நிதியாண்டில் வெறும் 17 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டத்தை மட்டுமே சந்தித்து இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 3 மடங்கு அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

Advertisement


2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி 74.26 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.

இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 482.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 194.13 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

அதேபோல் இந்நிறுவனத்தின் செலவின அளவுகள் கடந்த வருட அளவான 213.22 கோடியில் இருந்து நடப்பு நிதியாண்டில் 581.86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாகவே இந்நிறுவனம் லாபத்தைச் சந்திக்காமல் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

English Summary

Adani Green Energy Q1 net loss widens to Rs 74 crore
Advertisement