ஆனந்த் பஜாஜ் மறைந்தார்..!

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆனந்த் பஜாஜ் வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.


இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய ஆனந்த் பஜாஜ் சுமார் 19 வருட இந்நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். வெறும் 41 வயது மட்டுமே ஆன நிலையில் இவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய வர்த்தகச் சந்தையையே ஆட்டி வைத்துள்ளது.

2006ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராகச் சேர்ந்த ஆனந்த் பஜாஜ், தனது நிர்வாகத் திறனால் இந்நிறுவனத்தை உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இவரது மறைவு குறித்துப் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சற்றும் எதிர்பார்க்காத வகையில் நடந்துள்ள அனந்த் பஜாஜ்-இன் மறைவு நிறுவனத்திற்குப் பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Anant Bajaj, managing director of Bajaj Electricals, dies at 41