61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..!

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, ஜூன் காலாண்டில் 61.07 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சனிக்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கோல் இந்தியா 2018-19 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 3,786.44 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இதன் அளவு 2,350.78 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வருவாய் அளவு இக்காலாண்டில் 17 சதவீதம் அளவில் உயர்ந்து 25,470.86 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் 630 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள கோல் இந்தியா ஜூன் காலாண்டில் 136.85 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Coal India profit surges 61% to Rs 3,786 crore