லாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..!

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்பீல்டு-இன் தாய் நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் ஜூன் காலாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.


ஜூன் 30 உடன் முடிந்த கலாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 25 சதவீதம் அளவிற்கு அதிகரித்து 576.2 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.

இது சந்தை கணிப்புகளான 606 கோடி ரூபாய் விடவும் குறைவாக இருந்தாலும், இது கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் சுமார் 2,547 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் 27 சதவீதம் அதிகமாகும்.

Have a great day!
Read more...

English Summary

Eicher Motors Reports Highest Quarterly Profit In A Decade