லாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..!

இந்திய சிமெண்ட் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 34 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மந்தமான விற்பனையின் காரணமாக வருவாய் மற்றும் லாபம் அதிகளவில் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 40.43 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 34 சதவீதம் வரையில் குறைந்து 26.69 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த வருடத்தில் 1,466.75 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 1,366.17 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இக்காலாண்டில் தான் அமலாக்க துறை இந்நிறுவனத்தின் மீது பணச் சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

Have a great day!
Read more...

English Summary

India Cements Q1 earning: Profit falls 34%