ஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி இணைப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய தபால் துறையை மேம்படுத்து தபால் சேவை உடன் வங்கி சேவையும் துவங்கத் திட்டமிட்டது.

இத்திட்டத்தின் படி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நாட்டில் சுமார் 650 கிளைகளுடன் துவங்கப்பட உள்ளது.

சேமிப்பு கணக்கு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-யில் 3 வகையான சேமிப்புக் கணக்குகள் அளிக்கப்படுகிறது.

1. சாதாரணச் சேமிப்பு கணக்கு
2. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு
3. அடிப்படை சேமிப்பு கணக்கு

 

வட்டி விகிதம்

அனைத்து வங்கி கணக்குகளுக்கும் அடிப்படை வட்டி விகிதமாக 4 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.

நடப்பு கணக்கு

மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சிறு கடைகள், தனிநபர் வியாபாரிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் பிற வங்கிகளில் வழங்குவதைப் போலவே நடப்பு கணக்கு சேவையும் இவ்வங்கியில் அளிக்கப்படுகிறது.

டோர் ஸ்டெப் சேவை

இந்தக் கணக்குகளைத் திறக்க மக்கள் யாரும் தபால் நிலையத்திற்கோ, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-கிற்கோ செல்ல வேண்டியதில்லை, தபால்காரர் மூலம் வீட்டிலேயே இருந்து திறந்துகொள்ள முடியும்.

கட்டணம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-இன் டோர் ஸ்டெப் சேவையைப் பெற மக்கள் 155299 என்னும் எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

முதல் முறையாகத் தபால் துறையில் கணக்கு துவங்குவோருக்கு இலவசமாகவும், பழைய வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிகிறது.

 

செயலி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-இன் சேவைகளை மொபைல் போனில் பயன்படுத்த மொபைல் செயலியையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முக்கியமான சேவை

அனைத்திற்கும் தாண்டி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம் அனைத்து வகையான பில், ரீசார்ஜ் போன்றவற்றைச் செய்துகொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

India Post Payments Bank to start operations on 21 August