பேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..!

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கியும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான, வேகமான, எளிமையா வங்கி பரிமாற்ற சேவையை வழங்க வேண்டும் என்று உலகின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவை அளிக்கும் நிறுவனமான பேபால் உடன் கூட்டணி வைத்துள்ளது.

Advertisement


இதற்கு ஒப்பந்தம் இரு நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டணிக்கான பனிகளை உடனே துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கியிடம் 35 மில்லியன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ளது. இந்நிலையில் பேபால் உலகம் முழுவதும் 200 சந்தைகளில் 19 மில்லியன் விற்பனையாளர்களுடன் உள்ளது.

Advertisement

இக்கூட்டணி மூலம் இந்தியாவில் பேபால் நிறுவனத்தின் சேவை விரிவாக்கம் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு பண பரிமாற்றம் சேவை மற்றும் உலகளாவிய சேவையும் பெற முடியும்.

English Summary

PayPal enters into pact with HDFC Bank
Advertisement