ஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..!

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏர்ஏசியா நிறுவனம் உள்நாட்டுப் பயணக் கட்டணத்தில் 45 சதவீதம் வரை சலுகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது

இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அம்ரிஸ்டர், டெல்லி, ராஞ்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் கிடைக்கும் என்றும் ஏர்ஏசியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சலுகை காலம்

ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2019 பிப்ரவரி 19 முதல் 2019 ஆகஸ்ட் 13 வரையிலான விமானப் பயணங்களுக்காக 2018 ஆகஸ்ட் 19-ம் தேதி வரை புக் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முக்கியக் குறிப்பு

சலுகை விலை முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தச் சலுகைகள் எல்லா நேரங்களிலும் கிடைக்காது. குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும் என்றும் ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.

அதிகம் வாங்கி அதிகம் சேமிக

அதிக டிக்கெட்கள் வாங்கி அதிகம் சேமிக என்ற சலுகையின் கீழ் முதல் டிக்கெட்களுக்கு 15 சதவீத டிஸ்கவுண்ட், 2 வது பயணி டிக்கெட்களுக்கு 25 சதவீத டிஸ்கவுண்ட் மற்றும் 3 வது கூடுதல் பயணிக்கு 35 சதவீத பயணக் கட்டண டிஸ்கவுண்ட்டும் அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் 9 நபர்கள் வரை டிக்கெட்கள் புக் செய்து சலுகை பெற முடியும்.

ஏர் இந்தியா

பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் 18INDAY என்ற குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யும் போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி சலுகையானது 2018 ஆகஸ்ட் 15 வரை புக் செய்யப்படும் டிக்கெட்களுக்குக் கிடைக்கும்.

Have a great day!
Read more...

English Summary

AirAsia Independence Day sale: Up to 45% discount on flight tickets