வேலை தேடுவோருக்கு பம்பர் பரிசு.. 70% சதவீத நிறுவனங்களில் காலியிடங்கள்..!

நடப்பு ஆண்டின் அடுத்த ஆறுமாதங்களில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம். வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீட்டுத்துறைகளில் எண்ணற்ற வேலைகள் உருவாக்கப்படும் என நவுக்ரி டாட் காம் எடுத்த கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளன.

பொருளாதார எழுச்சிகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருவதால், இதுகாறும் நீடித்து வந்த பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

வளர்ச்சி

ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் 70 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இது கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி ஆகும். 2016 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 60 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனை 31 சதவீதம் பேர் ஒத்துக்கொள்கின்றனர்.

வேலை வாய்ப்புகள்

நடப்பு ஆண்டில் அடுத்த 3 மாதங்களில்ல அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பது, தொழில் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நம்பகமான சமிக்ஞை ஆகும்.1 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள ஊழியர்களுக்கு 3 இல் 2 பங்கு தேவை அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியும், புதிய வேலை வாய்ப்புகளும் பணி நீக்க நடவடிக்கையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுச்சி

2016 நவம்பர் முதல் 2018 டிசம்பர் மாதம் வரையிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இது பொருளாதாரத்தில் ஏற்பட்ட புதிய எழுச்சி என்கிறார் நவுக்ரி டாட் காமின் முதன்மை விற்பனை அதிகாரி சுரேஷ். சில நிறுவனங்கள் பணியிடங்களைக் குறைத்ததால், பணிநீக்கங்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

தட்டுப்பாடு

அடுத்த அரையாண்டுகளில் வேலை வாய்ப்புகள் உருவாகினாலும் திறமையான தொழிலாளர்களுக்கான தேவையில் தட்டுப்பாடு ஏற்படும். தகவல் தொழில்நுட்பம், விற்பனை , மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

அதிகக் காலியிடங்கள் உள்ள துறைகள்

புள்ளி விவர ஆய்வு, திட்ட மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர இயக்கத் திறன் உள்ளிட்ட துறைகளில் திறமையானவர்களுக்குத் தேவை அதிகமாக இருக்கும். ஊதிய விதங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்படும். 10 சதவீதமோ கூடுதலாக ஊதிய உயர்வு இருக்கும் என்று 56 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 10 லிருந்து 20 சதவீதமாகவோ, அல்லாது 20 விழுக்காட்டுக்கு அதிகமாகவோ ஊதியம் உயரும் என்பதும் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Bamber Prize for Job Seekers, Vacancies in 70% Of Companies