8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலையான தன்மை, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான வருவாய் அளவீடுகளின் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 8 நாட்களில் மட்டும் சுமார் 8,500 கோடி ரூபாய் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மட்டும் பங்கு மற்றும் கடன் சந்தையில் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய சந்தையில் 61,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-10 காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சுமார் 2,373 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

அதேபோல் கடன் சந்தையில் 6,208 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாதத்தில் 1-10 தேதிகளில் சுமார் 8,581 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பங்குச்சந்தையில் பெற்றுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

FPIs invest Rs 8,500 crore in just 8 sessions in August