லட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..!

மத்திய அரசு வேலையின்மை சதவீதத்தினைக் குறைக்கப் புதிய முடிவினை எடுத்துள்ளது. இதன் மூலம் ரீடெயில், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் தற்காலிக அரசு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

வேலை தேடல்

இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 2018-2019 நிதி ஆண்டில் 3.1 கோடி நபர்கள் வேலை வாய்ப்பினை தேடி வருகின்றனர் என்று கூறுகின்றது.

சரிவு

தற்போது இந்தியாவில் வேலையில் உள்ள மக்கள் எண்ணிக்கை 0.01 சதவீதம் எனச் சென்ற ஆண்டு இருந்த 40.67 கோடியில் இருந்து 40.62 கோடி என 4.65 வேலை வாய்ப்புகள் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம்

இந்தியாவில் உள்ள இந்த வேலையின்மைக்கான காரணமானது முதலீடுகள் சரிந்து வருவதே என்றும் கூறுகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வேலையின்மை என்பது பெறும் அளவில் சரிந்துள்ளதாகவும் சர்வே முடிவுகள் கூறுகின்றனர்.

தற்காலிக வேலை வாய்ப்புகள்

தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுப்பு அலுவலகம், ஆயுஷ்மன் பாரத், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (NHPM), ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களின் கீழ் மத்திய அரசு லட்சம் கணக்கான தற்காலிக அரசு வேலை வாய்ப்புகளை அளிக்க உள்ளது.

2018-2019 நிதி ஆண்டில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் அரசு நிறுவனங்களில் கிடைத்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் தற்காலிக வேலை வாய்ப்பினால் என்ன பயன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

 

தேர்தல்

2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மத்திய அரசு தற்காலிக வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் இந்த வேலையின்மை அதிகரிப்பு என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தினை மத்திய அரசு தவிடு பொடியாக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆயூஷ்மான் பாரத்

ஆயூஷ்மான் பாரத் எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கான மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் கீழ் 1 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்களைப் பணிக்கு எடுத்துக் குடும்பங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மறுப்பு

மத்திய மற்றும் மாநில நிறுவனங்களில் 24 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக அன்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி வேலையினை அதிகரித்து இருப்பதினை மறுத்து வருகிறார்.

மோடி

பிரதமர் மோடி அவர்கள் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உருவாகாமல் இருக்கும்? ரயில் பாதை, சாலை எனக் கட்டுமான திட்டங்கள், சூரிய ஒளி மின்சாரப் பூங்காக்கள் எனப் பல திட்டங்கள் கோடி கணக்கான செலவுகளில் நடைபெற்று வரும் நிலையில் எப்படி வேலை வாய்ப்பு உருவாகாமல் இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அது மட்டும் இல்லாமல் வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது, இதுவெல்லாம் வேலைவாய்ப்பின்மை உருவாக்கவில்லை என்பதைக் காட்டுகிறதா என்றும் பதில் அளித்துள்ளார்.

 

Have a great day!
Read more...

English Summary

Lakhs Of Temporary Government Jobs. Modi's Next Action Plan