உணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..!

ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்க குறியீடு 4.51 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில் 4.17 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவிகம் கணிப்பில் கடந்த 9 மாதங்களாக 4 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் பண வீக்க குறியீடானது ஜூன் மாதம் 4.92 சதவீதமாக இருந்தது. அதற்கு முன்பு 5 சதவீதம் வரை சென்றுள்ளது. உணவு பொருட்கள் விலை சரிந்ததே ஜூலை மாத நுகர்வோர் பணவீக்கத்திற்கான காரணங்கள் ஆகும்.

குறைந்தபட்ச ஆதார விலை

விவசாயப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு போன்ற காரணங்களால் சில்லறை பொருட்கள் மீதான பணவீக்கம் 0.70 சதவீதம் வரை உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச காரணங்கள்

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை தான் பணவீக்க உயர்வுக்கான காரணங்கள் ஆகும்.

ஆர்பிஐ

பணவீக்க சரிவை கட்டுப்படுத்தவே ஆர்பிஐ வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பதும், கடந்த இரண்டு நாணய கொள்கை கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது கடன் மீதான வட்டி விகிதம் உயரும் அதே நேரம், டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதம் அதிகரித்து அதிக லாபம் அளிக்கும்.

Have a great day!
Read more...

English Summary

Retail inflation eases to 4.17% in July as food prices decline