சந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது!

இந்திய ரூபாயின் மதிப்பு வரும் ஆண்டில் வீழ்ச்சி அடையும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அமெரிக்கா- சீனா இடையே நடைபெறும் ஆதிக்கப் போட்டிகளும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய சந்தையைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தில் அதிரடியான தாக்கத்தை உருவாக்க முடியாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசமான சரிவு

வர்த்தக மோதல் காரணமாக இந்த ஆண்டு இந்திய ரூபாயின் சரிவு 7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஜூலை மாதம் 69.122 ஆக இருந்தது. இது ஆசிய பண மதிப்புகளை விட மோசமான சரிவு என்று வர்ணிக்கப்படுகிறது.

முன்னேற்றம்

ரிசர்வ் வங்கி எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு 1 ஆம் தேதி நல்ல முன்னேற்றம் கண்டது. இது 68.60 என்பதில் இருந்து 68.22 ஆகக் குறையும் என வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியாவுக்குப் பாதிப்பில்லை

வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தக் காரணமாக ஜூ லை மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, அடுத்த 12 மாதங்களில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகத்தில் நிலவி வரும் அதிர்வு இந்தியாவைத் தாக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவால் இயலாது

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது . ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை உயர்த்தியிருந்தாலும், இந்திய ரூபாயைக் கணிசமாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.

நம்பிக்கை

நடப்பு ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் பற்றாக்குறையும், ரூபாய் மதிப்புச் சரிவு உருவாகியுள்ளது.இந்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நிதியம் இந்தியாவை அறிவுறுத்தியுள்ளது. விரைவில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Rupee To Trade Near Record Low Over Coming Year