அடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்!

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. சர்வ தேசச் சந்தையில் விலை குறைந்ததையடுத்து, சரக்கு இருப்பைப் பூர்த்திச் செய்வதற்காக நகைக்கடைகள் கொள்முதலை உயர்த்தி வருகின்றன.

ஆண்டுக்கு ஆண்டு 42 சதவீதமாக அதிகரித்த நகை கொள்முதல், கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த திங்கட்கிழமை சரிவில் சிக்கியது.

கொள்முதல் - பலவீனம்

ரூபாயின் மதிப்பு 69.89 ஆகப் பலவீனமடைந்துள்ள நிலையில், தங்கத்தின் கொள்முதல் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு, பணத்தின் மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நகை வணிகர்கள் கொள்முதலில் ஆர்வம் காட்டுவது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை 71 வரை கொண்டு செல்லும் எனப் பொருளாதார வல்லுநர் கேமரூன் அலெக்சாண்டர் கூறினார்.

குறைந்த விலையில் கொள்முதல்

தங்க நகை விற்பனையாளர்கள் ஜூன் மாதத்தில் நகை கொள்முதலை தவிர்த்து வந்தனர். ஜூலை மாதத்தில் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு நகைகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியதாக மும்பையைச் சேர்ந்த வணிகர் கூறினார். ஏனென்றால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் தங்கம் விலை குறைந்திருந்தது.

வாங்கும் திறன்

2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் தங்க இறக்குமதி 28 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. விவசாயிகளின் வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்போது வாங்கும் திறன் அதிகரிக்கும் என உலகத் தங்ககவுன்சில் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தேவை அதிகரிப்பு

தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடைசிக் காலாண்டுகளில் தங்கத்துக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான முன்னேற்பாடே தங்கம் கொள்முதல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Gold Imports Rise For First Time In 7 Months: Metal Consultancy GFMS