ரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் செவ்வாய்க்கிழமை 70.07 ரூபாயாகச் சரிந்த நிலையில் இந்தியாவிடம் உள்ள அந்நிய செலாவணி இருப்பும் 400 பில்லியன் டாலர் குறியீட்டிற்கும் குறைவாகச் சரிய வாய்ப்புள்ளதாகத் தரவுகள் கூறுகின்றனர்.

துருக்கி மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடை தான் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கியக் காரணியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் பல வளரும் நாடுகளின் பொருளாதாரமும், சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. துருக்கி ஸ்டீல் பொருட்கள் மீது அமெரிக்க இரட்டிப்பு வரி உயர்வினை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு

சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு எதிர்பார்த்ததை விட முன்பே 70 ரூபாய் சரிவினை எட்டியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் விரைவில் ஈரான் மீதான பொருளாதாரத் தடையும் விரைவில் வர உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு எப்போது சரிந்தாலும் அந்நிய செலாவணி இருப்பினை வைத்துத் தான் மோடி அரசு சமாளித்து வந்தது.

 

தற்காலிகமான ஒன்று

துருக்கி மீதான பொருளாதாரத் தடையினால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து இருப்பது என்பது தற்காலிகமான ஒன்றே என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அந்நிய செலாவணி கையிருப்பு

ஏப்ரல் மாதம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 426 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 3-ம் தேதி 404 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. 2017 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இந்தியாவின் அந்நில செலாவணி கையிருப்பு 400 டாலருக்கும் குறைவாகச் சரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுளது.

ஆர்பிஐ தலையீடு

2018-ம் ஆண்டில் இந்திய ரூபாய் அடிப்பு கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை சரிந்துள்ள நிலையில் ஆர்பிஐ அதனைச் சரிய செய்யப் பல வகைகளில் தங்களது ஆதரவினை அளித்துஜ் வந்துள்ளது.

ஆர்பிஐ என்ன தான் ரூபாய் மதிப்புச் சரிவில் தலையிட்டாலும் முதலீடுகள் வெளியேறுவது அதிகரிக்கும் போது ரூபாய் மதிப்பின் மீதும் ஏற்படும் தாக்கத்தினைக் கட்டுப்படுத்த முடியாது.

 

எதற்கு அந்நிய செலாவணி

அதிகளவில் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தால் மட்டுமே சர்வதேச கொடுக்கல் வாங்கலுக்குச் சிக்கல் வராமல் இருக்கும்.

அரசு

மூத்த அரசு அதிகாரிகள் தற்போதைய நிலையைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் இது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. நமக்கு மட்டும் என்றால் தான் பயப்பட வேண்டும். நமது மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. துருக்கியால் ஏற்பட்ட சரிவு தான் இது. நிலைமை நம் கட்டுக்குள் தான் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

Have a great day!
Read more...

English Summary

Indian forex reserves under new pressure as rupee crashes to all time low