டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சரிந்து 70.09 ரூபாயாக உள்ளது. துருக்கியில் உள்ள நிதி நெருக்கடியால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு முயற்சியாக அமெரிக்க டாலர் மற்றும் சீன யென் உள்ளிட்டவற்றை விரும்புவதே காரணம் ஆகும்.

10 வருடம் பத்திர திட்டங்களின் வருவாய் 7.75 சதவீதத்தில் இருந்து 7.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரம் இந்திய பங்கு சந்தை குறியீடுகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் காலை 10:57 மணி நிலவரப்படி 142.39 புள்ளிகள் என 0.39 சதவீதம் உயர்ந்து 37,790.55 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 48.85 புள்ளிகள் என 0.43 சதவீதம் உயர்ந்து 11,404.65 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்க குறியீடு 4.51 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில் 4.17 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவிகம் கணிப்பில் கடந்த 9 மாதங்களாக 4 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் பண வீக்க குறியீடானது ஜூன் மாதம் 4.92 சதவீதமாக இருந்தது. அதற்கு முன்பு 5 சதவீதம் வரை சென்றுள்ளது. உணவு பொருட்கள் விலை சரிந்ததே ஜூலை மாத நுகர்வோர் பணவீக்கத்திற்கான காரணங்கள் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

Indian Rupee Hits Record Low Of 70 To The Dollar