ரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டது.. இது எந்த வகையில் சாமானிய மக்களைப் பாதிக்கும் தெரியுமா?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் செவ்வாய்க்கிழமை 70.07-ஐ தொட்டது. 2013-ம் ஆண்டுக்கு ஒரு நாளில் இதுவே மிகப் பெரிய சரிவாகும். இந்திய ரூபாய் மதிப்பு 69.93 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 70.07-ஐ எட்டியுள்ளது.

துருக்கி உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தினை ஆர்பிஐ விற்க முடிவு முட்வு செய்துள்ள இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தாலும் அது மிகப் பெரிய அளவிலான பாதிப்பு ஒன்றும் இல்லை. 2018-ம் ஆண்டில் இது வரையில் ரூபாய் மதிப்பு 7.2 சதவீதம் வரை சரிந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பானது டிசம்பர் மாதம் தான் 70 ரூபாயினைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் எட்டியுள்ளது. இதனைப் பார்த்தால் இந்திய ரூபாய் மதிப்பு டாலர் ஒன்றுக்கு 80 ரூபாயாக உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

எனவே ரூபாய் மதிப்பு சரிவானது எந்த வகையில் கெட்டது மற்றும் நல்லது என்று இங்குப் பார்க்கலாம்.

இறக்குமதி

ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதிக்குக் கூடுதல் செலவாகும். கச்சா எண்ணெய் போன்ற சில பொருட்களின் தேவையினை இந்திய போன்ற நாட்டால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயரும். ஏற்கனவே குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ஈரான் மீதும் அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் பெட்ரோல் விலை 100 ரூபாய் வரை விரைவில் உயரும் அபாயமும் உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்ந்தால் காய்கறிகள், மளிகை சாமணங்கள், போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்.

கல்வி மற்றும் சுற்றுலா

இந்தியாவில் இருந்து வெளிநாடும் சென்று படிக்கும் மாணவர்களின் செலவுகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலா செல்லும் போதும் செலவு அதிகரிக்கும்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கணினிகள், ஸ்மார்ட்போன் மற்றும் கார்களின் விலையும் உயரும். இறக்குமதி துறை மற்றும் சந்தையும் பெரும் அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நன்மைகள்

இந்தியாவில் செய்யப்படும் ஏற்றுமதிகள் அதிகரிக்கும், அதிக வருவாயும் கிடைக்கும். ஐடி துறை, பார்மா துறை வருவாய் அதிகரிக்கும்.

என்ஆர்ஐ

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் இந்தியர்களின் குடும்பங்களுக்குக் கூடுதலாகப் பணம் கிடைக்கும்.

Have a great day!
Read more...

English Summary

Rupee breaches the 70 mark: How it's bad, and good