சிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு!

தேசபக்தி மிக்க வர்த்தகம் நிறுவனங்கள் தொடர்பான கருத்துக் கணிப்பில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்திலும், எல்.ஐ.சி, பதஞ்சலி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆன்லைன் தரவு திறனாய்வு நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில், நிதித்துறையைச் சார்ந்த ஸ்டேட் பாங்கு அதிக வாக்குகளைக் கைப்பற்றிச் சிறந்த சுதேசி நிறுவனமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கருத்துக்கணிப்பு

11 வகைகளாகப் பிரிக்கப்பட்ட 152 பிராண்டுகள் கருத்துக்கணிப்புக்கு விடப்பட்டன. 1193 பேரிடம் கருத்துக்கள் கோரப்பட்டன. இதில் நிதித்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்கு 47 சதவீதத்தைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. எல்.ஐ.சிக்கு 16 வாக்குகள் கிடைத்துள்ளன.

டாடா முதலிடம்

அளப்பரிய சுதேசி பிராண்டுகளின் பட்டியலில் வாகன உற்பத்தித் துறையைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் 30 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 13 விழுக்காடு வாக்குகளும், மாருதி சுசுகி நிறுவனம் 11 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன.

முந்தியது அமுல்

உணவுப் பொருள் தயாரிப்பில் சிறந்த பிராண்டாக அமுல் முதலிடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பதஞ்சலி இடம் பெற்றுள்ளது

பதஞ்சலி முன்னிலை

சிறந்த சுதேசி பிராண்டுகள் தயாரிப்பில் பதஞ்சலி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கோல்கேட், டாபர் அன் விக்கோவின் பற்பசைகளை விடப் பதஞ்சலி பிராண்டு சுதேசிகளின் விருப்பமாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்

தொலைத் தொடர்பு துறையில் சிறந்த தேசபக்தி நிறுவனமாகப் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் ஜியோ 4 வது பெரிய சுதேசி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் நிர்மாவும், தேநீர் தூள் தயாரிப்பில் டாடா டீயும் சிறந்த தேசிய நிறுவனமாக அறியப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

SBI tops the list of most patriotic brands; check how Patanjali, Reliance Jio, Tata rank