மல்லையாவால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை.. நெருக்கடியில் நரேஷ் கோயல்!

ஆண்டுத் தொடக்கத்திலிருந்து மோசமான நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு, மும்பை பங்குச் சந்தையில் ஏற்பட்ட 12 விழுக்காடு சரிவு இடியாய் இறங்கியது. 2018 ஆண்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கே போதாத காலமாக மாறியுள்ளது.

காலதாமதமாக ஊதியம் வழங்கி வந்த அந்த நிறுவனம் நெருக்கடியைச் சமாளிக்கச் சம்பளக்குறைப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும் எந்த வகையிலும் சமாளிக்க முடியாமல் திண்டாடும் நரேஷ் கோயல் வங்கிளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் கடன் கோருவதற்கு முன்பு எதிர்காலத்திட்டத்தையும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான வழிவகைக் குறித்தும் தெளிவான திட்டங்களோடு வர வேண்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கண்டிப்பு காட்டியுள்ளது.

எதிர்காலத் திட்டம்

நிதி நெருக்கடியிலிருந்து கடப்பதற்கு உதவுவதாகக் கூறியுள்ள ஸ்டேட் பேங்க் இந்தியா, எதிர்காலத் திட்டங்களைக் கோருவதாகவும், அது குறித்த தெளிவான முடிவுகளை இதுவரை சொல்லவில்லை என்றும் ஜெட் ஏர்வேஸின் செயல் தலைவர் விஜய் துபே கூறினார். கொடுக்கப்படும் உத்தரவாதத்தைப் பொறுத்தே உதவி கிடைக்கும் என்றார்.

பாடம் புகட்டும் மல்லையா

முதல் காலாண்டில் ஏற்பட்ட 4876 கோடி ரூபாய் இழப்பு 4 வது காலாண்டில் பெரிய ஏமாற்றமாக முடிந்தது. கிங் பிஷரின் தோல்வியை அவர்கள் மீண்டும் எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் கிங் பிஷர் நிறுவனம் வாங்கிய 6077 கோடி ரூபாய், வட்டியுடன் 9990 கோடி ரூபாயாக உயர்ந்ததை அவர்களால் மறக்கமுடியவில்லை. ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் 8400 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ள ஸ்டேட் பேங்க் இந்தியாவின் தலைவர் ரஜனீஷ்குமார், ரிசர்வ் வங்கியின் கடன் கணக்கு இயல்பு நிலையை வகைப்படுத்தும் பட்டியலில் தரமான இடத்தைத் தக்க வைத்துள்ளதாகக் கூறினார்.

நேர்மையில் தவறில்லை

ஏனைய வங்கிகளில் நிலையான கணக்குகளை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் கடனை செலுத்துவதில் தவறு செய்யவில்லை என்று ரஜனீஷ் தெரிவித்தார். 3 ஆண்டுகளில் அனைத்து கடன்களையும் செலுத்தியிருப்பதோடு, மொத்த கடனில் 3000 கோடி ரூபாயை குறைத்துள்ளதாகக் கூறினார்.

வீழ்ச்சி கிடையாது

வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களால் சம்பளம் குறைக்கப்பட்டதாக அதன் செய்தி தொடர்பாளர் கூறினார். பணப்புழக்கத்துக்கான தொடர் முயற்சிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்காது என ஊழியர்கள் நம்புகின்றனர். அனைத்து நம்பிக்கைகளும் ஸ்டேட் பாங்க் இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

SBI wants to know Jet Airways' future plans before giving a loan