ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

தொலைத் தொடர்புத்துறையில் அண்மைக்காலமாக வலுத்து வரும் போட்டி வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு இணையாக வோடபோன் நிறுவனம் தன் பங்களிப்பு என்ன என்பதைக் காட்டத் தொடங்கியுள்ளது. 28 நாட்களுக்கு வரம்பில்லா அழைப்புகளை வழங்கும் 99 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பரவசமாக்கியிருக்கிறது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஒரு மாதங்களுக்கு வரம்பில்லாமல் பேசி மகிழலாம். நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களும், வாரத்துக்கு 1000 நிமிடங்களும் பேசிக்கொள்ள முடியும்.

ஜியோ சலுகை

ஜியோ வழங்கும் 98 ரூபாய் திட்டத்தில் வரம்பில்லா அழைப்புகளுடன் 2 ஜி பி டேட்டா மற்றும் 300 இலவச குறுந்தகவல்கள் எனச் சலுகைப் பொதிகள் அளிக்கப்படுகிறது. அதேநேரம் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்களும் , வாரத்துக்கு 1200 நிமிடங்களும் வரம்பில்லா அழைப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனச் சில சங்கடமில்லாத கட்டுப்பாடுகள்.

ஏர்டெல் திட்டம்

99 ரூபாய்க்கு வரம்பில்லா அழைப்புத் திட்டத்தை வழங்கி வந்த ஏர்டெல் , கடந்த மாதம் மாற்றிக்கொண்டது. தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பில்லா அழைப்புகளை அளித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் 118 ரூபாய்க்குத் தினசரி ஒரு ஜி.பி டேட்டாவை வழங்கி வருகிறது.

போட்டியில் வோடபோன்

ரெட் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச நெட் பிளிக்ஸ் சலுகைகளையும், அமேசான் சந்ததாரர்களுக்குக் கூடுதல் டேட்டாக்களையும் வோடபோன் நிறுவனம் வழங்கி வந்தது. போஸ்ட் பெய்டு திட்டம் மாதம் 399 ரூபாயில் தொடங்கி 2999 வரை வழங்குகிறது. இதில் சில மாறுதல்களுடன் ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு 1299 ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் சலுகைகளைக் கொடுக்கிறது.

கூடுதல் டேட்டா

458 ரூபாய் ரீசார்ஜில் 84 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.8 ஜி.பி டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 235.2ஜிபி டேட்டாவுடன் வரம்பில்லா அழைப்புகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

பழைய சலுகைப்பொதி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 511 மற்றும் 569 ரூபாய்க்கான திட்டத்தை வோடபோன் செயல்படுத்தியது.511 ரூபாய் திட்டத்தில் 84 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி டேட்டாவுடன் வரம்பில்லா அழைப்புகளை வழங்கி வருகிறது. 569 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. 100 இலவச குறுந்தகவல் சேவையுடன் 54 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Have a great day!
Read more...

English Summary

Vodafone takes on Airtel, Jio with unlimited calls at Rs 99