கடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..!

இந்தியாவையே அதிரவைத்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்ய 14,000 கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய இவ்வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தற்போதைய அலகாபாத் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உஷா அனந்தசுப்பிரமணியன் மத்திய அரசின் உத்தரவின் படி பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

3 மாதம்

இந்த மோசடியில் உஷாவின் தலையீடு இருப்பதாகச் சிபிஐ குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அலகாபாத் வங்கி பணிகளில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டுப் பெயருக்கு தலைவராக மட்டுமே உஷா இருந்து வருகிறார்.

மத்திய அரசு

இந்நிலையில் தற்போது மத்திய அரசு உத்தரவின் பெயரில் இவ்வங்கி பணியில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளார் உஷா.

கடைசி நாள்

அனைத்திற்கும் மேலாக இன்று உஷா அனந்தசுப்பிரமணியன் ஓய்வு பெற உள்ளார், அதாவது வங்கி பணியில் அவரது கடைசி வேலை நாள் இன்று தான்.

ஆனால் கடைசி நாளில் உஷா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அனுமதி

மேலும் மத்திய அரசு தற்போது சிபிஐ அமைப்பிற்கு உஷா அனந்தசுப்பிரமணியன் மற்றும் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சஞ்ஜீவ் சரண் ஆகியோரை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

34 வருடம்

உஷா அனந்தசுப்பிரமணியன் சுமார் 34 வருடமாக வங்கித்துறையில் பணியாற்றி வருகிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மட்டும் அல்லாமல் பாரதிய மஹிளா வங்கியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

 

முதல் பெண் தலைவர்

2018ஆம் ஆண்டில் துவக்கத்தில் உஷா அனந்தசுப்பிரமணியன் இந்திய வங்கி அமைப்புகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதிலும் இந்த 71 வருட அமைப்பின் முதல் பெண் தலைவரும் இவர் தான்.

 

Have a great day!
Read more...

English Summary

Allahabad Bank CEO fired on her last day in office