38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..!

நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் அதிக எரிபொருள் விலை, வர்த்தகப் பாதிப்புகள் காரணமாக 38 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.


கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 175.2 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் 19.6 சதவீதம் அதிகரித்து 2,236 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 1,869.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2017-18 நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் எரிபொருள் செலவினம் 52 சதவீதம் அதிகரித்து 812.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு தான்.

Have a great day!
Read more...

English Summary

SpiceJet posts Q1 loss at Rs 38 cr on higher fuel cost