மகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..!

இந்தியாவின் முன்னணி மருத்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 983 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் சந்தை கணிப்புகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உடைத்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் சன் பார்மா நிறுவனம் 423 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லாபத்தில் சுமார் 87 சதவீத வளர்ச்சியை அடைந்து அசத்தியுள்ளது.

இக்காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 16.7 சதவீதம் வளர்ச்சி அடைந்து 7,423.9 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இதன் அளவு 6,360.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Xelpros மற்றும் Elepsia ஆகிய மருந்துகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய விண்ணப்பம் அளித்துள்ளதாகச் சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Sun Pharma Q1 profit at Rs 983 crore