ரிலையன்ஸ் ஜியோபோன்2 பிளாஷ் சேல் மீண்டும் எப்போது தெரியுமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் அதன் ஜியோபோன் 2 பிளாஷ் விற்பனையினை இன்று ஆகஸ்ட் 16-ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நடத்திய நிலையில் மீண்டும் அடுத்த விற்பனை எப்போது என்ற அறிவிப்பினைடும் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.

எனவே ஜியோபோன் 2 பற்றியும் அதனை எப்படி புக் செய்வது என்றும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

அறிவிப்பு

ஜியோபோன் 2 குறித்த அறிவிப்பினை ரிலையன்ஸ் ஜியோவின் 41 வது ஆண்டு பொது கூட்டத்தின் தனது மகன் மகள் மூலமாக முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து 2,999 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த போனில் கைஓஎஸ் நிறுவனத்தின் இயங்கு தளம் இருப்பதும் அதில் கூகுள் நிறுவனம் அன்மையில் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

பியூச்சர் போனில் கூகுள் செயலிகள்

ஜியோபோன் 2 4ஜி பியூசர் போன் என்ற நிலையில் யூடியூப், கூகுள் மேப் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகள் இயங்கு அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

4ஜி வோல்ட் வசதி, 2.4 இஞ்ச் டிஸ்பிளே, 2எம்பி கேமரா, ஜியோ டிவி, 512 எம்பி ரேம், 4 ஜிபி உட்புற சேமிப்பகம் போன்றவை எல்லாம் இருக்கும்.

மீண்டும் எப்போது விற்பனை?

ஜியோபோன் 2 விற்பனை இன்று பிற்பகல் 12 மணியளவில் ஜியோயின் அதிகாரப்பூர்வ www.jio.com இணையதளத்தில் நடந்த நிலையில் மீண்டும் 2018 ஆகஸ்ட் 30-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

இரட்டை சிம்

இரட்டை சிம் வசதியுடன் வெளியாகியுள்ள ஜியோபோன் 2 ஒன்றில் ஜியோ மட்டுமே செயல்படும். இரண்டாவது சிம் கார்டாக பிற நெட்வொர்க்குகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Have a great day!
Read more...

English Summary

Reliance JioPhone 2 Next Flash Sale On August 30th 12 Noon