வாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..!

முன்னாள் பிரதமர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று இறந்து இருக்கும் நிலையில் அவர் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறது.

காங்கிரஸ் அல்லா பிரதமர் ஒருவர் முதன் முறையாக இந்தியாவை 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்ட பெருமையும் வாஜ்பாயை தான் சேறும். இரண்டு முறை பிரதமராகப் பதவி ஏற்றுக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாததால் பதவியை இழந்தாலும் மூன்றாம் முறை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்று நிலையான ஒரு அரசை அளித்த பெருமை இவருக்கு உண்டு.

பிவி நரசிம்ம ராவ் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அடிக்கல் நாட்டியதை வாஜ்பாய் திறம்படக் கையாண்டு 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கும் போது இந்தியாவின் பொருளாதாரம் ஒருவடிவத்தினைப் பெற்று இருந்தது. ஜிடிபி 8 சதவீதமாகச் செல்ல காரணமாக இருந்தது. பணவீக்கம் சரிந்தும் அந்நிய செலாவணி தேவைக்கும் அதிகமாகவும் இருந்தது.

வாஜ்பாய்க் கொண்டு வந்த திட்டங்கள் தான் பாஜகவிற்கு தேசிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்து வெளிச்சத்திற்கும் கொண்டு வந்தது. எனவே வாஜ்பாய் காலத்தில் கொண்டுவரப்பட்ட முக்கியப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சாலை திட்டங்கள்

வாஜ்பாய் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் இந்திய மக்களால் மறக்க முடியாதது என்றால் கோல்டன் குவாடிரில்டெரல் எனப்படும் சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைக் கொண்டு வந்தது மற்றும் பிரதான் மந்திரி கிராமின் சதாக் யோஜனா என்ற கிராஅ சாலைகளை நகரங்களுடன் இணைக்கும் திட்டம் போன்றவையால் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.

தனியார்மயமாக்கல்

அரசு நிறுவனங்களைத் தனியார் மையம் ஆக்கும் முடிவை எடுத்துப் பல அரசு நிறுவனங்களில் இருந்த பங்குகளைத் தனியாருக்கு அளித்தது வாஜ்பாய் தான். இவர் எடுத்த முடிவின் கீழ் தான் பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான ஜிங்க், இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்ரேஷன் லிமிட்டட் மற்றும் விஎஸ்என்எல் நிறுவனங்களின் அரசு முதலீடுகள் குறைக்கப்பட்டது. இன்று வரை அரசு நிறுவனங்கள் தனியார் மையம் ஆக்கப்பட்டு வந்தாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஜிடிபி

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம், 2003 (FRBMA) என்பதன் கீழ் நிதிசார் ஒழுக்கத்தை நிறுவன மயமாக்கல், இந்தியாவின் நிதி பற்றாக்குறையைக் குறைத்தது. இதன் கீழ் தான் 2000-ம் ஆண்டு -0.8 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி 2005-ம் ஆண்டு 2.3 சதவீதமாக உயர்ந்ததற்கான காரணமாகவும் அமைந்தது.

டெலிகாம் புரட்சி

டெலிகாம் நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்த வேண்டும் என்பதில் இருந்து வருவாய் பகிர்வுடன் தனியார் நிறுவனங்களுக்கு அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் டெலிகாம் துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்வ சிக்‌ஷா அபியான்

சமுகப் பாதுகாப்புத் திட்டமாக 2001-ம் ஆண்டு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வியை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த அடுத்த 4 வருடத்தில் பள்ளி குழந்தைகள் இடையில் படிப்பை விட்டு வெளியேறுவது 60 சதவீதமாகக் குறைந்தது.

Have a great day!
Read more...

English Summary

Things India will remember Atal Bihari Vajpayee for