இவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்!

இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை வசப்படுத்தியுள்ள செல்வ செழிப்பு மிக்கப் பெண்கள் பட்டியலில், கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசான சுஷ்மிதா வி.கிறிஸ்டினா முதல் இடத்திலும், ரோஷினி நாடார் 2 வது இடத்திலும் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கோட்டக் சொத்து மேலாண்மை, கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் ஹரூன் ரிப்போர்ட் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதற்கான ஆய்வுகளை நடத்தின. கோட்டக் வெல்த் ஹரூனின் சொத்து மதிப்பில் முன்னணி வகிக்கும் பெண்கள் - 2018 என்ற அந்தப் பட்டியலில் நூறு பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்மிதா கிரிஷ்ணா முதலிடம்

கோத்ரெஜ் குழுமத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசான ஸ்மிதா கிரிஷ்ணா, 5 இல் ஒரு பங்கு சொத்தை வசப்படுத்தி முன்னணியில் உள்ளார். இவரது சொத்தின் நிகர மதிப்பு 37,570 கோடி ரூபாய் ஆகும். இவர் 2014 ஆம் ஆண்டு அணுசக்தி அறிஞர் ஹோமி பாபாவின் பங்களாவை 371 ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ரோஷிணி நாடார்

சிவ்நாடாரின் மகளும், எச்.சி.எல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான ரோஷினி நாடார் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 30,200 கோடி. இதேபோல் சிவ்நாடாரின் மனைவி கிரண் நாடார் ரூ.20,120 கோடிக்கு சொந்தக்காரர் ஆவார்.

3 வது இடம்

பென்னட் கோல்மேன் அன்ட் கோ நிறுவனத்தின் தலைவர இந்து ஜெயின் 26,240 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளதாக
கோட்டக் வெல்த் ஹரூன் தெரிவித்துள்ளது.

4 வது இடம்

பயோகான் நிறுவனத்தின் இயக்குநரும் மேலாண் இயக்குநருமான கிரண் மசூம்தார் ஷா, 4 வது இடத்தில் இருக்கிறார். இவர் 24,790 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார்.

செல்வ செழிப்புள்ள பெண்கள்

யு.எஸ்.வி பார்மா நிறுவனத்தின் தலைவர் லீனா காந்தி திவாரிக்கு 10,730 கோடி ரூபாய் சொத்துக்களும், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் மனைவி சங்கீதா ஜிண்டாலுக்கு 10, 450 கோடி ரூபாய் சொத்துக்களும் உள்ளது. அரிஸ்டா நெட்வொர்க் செயல் தலைவர் ஜெயஸ்ரீ உல்லா, தெர்மாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனு ஆஹா, ஹெல்த் கேர் டெக்னாலஜியின் தலைவர் ஷிரதா அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சொத்துக்காரிகள்

பார்மசூட்டிக்கல் துறையில் 22 பெண்களும், மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் 12 பெண்களும், உணவு மற்றும் பிவரேஜ் துறையில் 8 பெண்களும் சொத்து மதிப்பில் முன்னணியில் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சராசரியாக 4000 கோடி ரூபாய் வரை ஈட்டிய பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

பணம் புரளும் பதவிகள்

பார்மசூட்டிக்கல் துறையில் உள்ள பெண்கள் இந்தப் பட்டியலில் முன்னணி வகிக்கின்றனர். நிறுவன அடிப்படையில் இன்போசிஸ், மற்றும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்டில் பதவி வகிக்கும் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மும்பையின் ஆதிக்கம்

மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சொத்து மதிப்பில் முன்னணியில் உள்ளது பட்டியலில் தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தைப் பெங்களூரைச் சேர்ந்த பெண்கள் பிடித்துள்ளனர்.

பெண்களின் வளர்ச்சி

2012 இல் 4 சதவீதமாக இருந்த சொத்து மதிப்பு 2017 இல் 9 சதவீதமாக வளர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள்

Have a great day!
Read more...

English Summary

India's richest women list: Smitha Crishna of Godrej tops, Roshni Nadar of HCL 2nd