கேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா?

கடவுளின் நாடு எனக் கேரளா அரசு கூறிவரும் நிலையில் கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருவது மட்டும் இல்லாமல் இந்திய பொருளாதாரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி டீ, காபி, ரப்பர் போன்றவற்றைப் பயிற் செய்தவர்கள் 600 கோடி ரூபாய் வரை நட்டம் அடைந்திருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

சேதம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபாய் வரை மாநிலத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையினையும் மத்திய உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

வெள்ளத்திற்குப் பின்

வெள்ளத்திற்குப் பிறகு கேரளா வேறு விதமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். கேரளா இது போன்ற ஒரு மிகப் பெரிய வெள்ளத்தில் சிக்கி பல நுற்றாண்டுகளி ஆகியுள்ளன.

இராணுவம்

பல்லாயிரம் கணக்கான மக்கள் பதுகாப்பு கருதி இடம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆயிரம் கணக்கான மக்கள் எங்கு இறந்துவிடுவோமோ என்ற பயத்திலும் உள்ளனர். அதே நேரம் மத்திய அரசும், இராணுவமும் தங்களது பணிகளைத் திறம்படச் செய்துவருகின்றனர். ஆனால் மக்கள் தங்கள் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

கேரள நிறுவனங்கள்

கேரளாவில் இருந்து பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் எல்லாம் கேரளாவின் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர். சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கிகளின் 40 முதல் 45 சதவீத வணிகக் கேரளாவில் தான் உள்ளது.

ஃபினான்ஸ்

முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனம் வசம் கேரளாவில் 650 கிளைகள் உள்ளன. மனப்புறம் ஃபினான்ஸ் நிறுவனத்திற்கு அதன் 15 சதவீத வணிகம் கேரளாவில் தான் உள்ளது.

ரப்பர்

டயர் நிறுவனங்கள் ரப்பர் தேவைக்குக் கேரளாவைத் தான் நம்பி உள்ளது. ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கும் கேரளாவில் மிகப் பேரிய சந்தை உள்ளது.

ரப்பர் உற்பத்தியில் இந்தியா 6 மிகப் பெரிய நாடாக உள்ள நிலையில் அதனை நுகர்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 2018-2019 நிதி ஆண்டில் 13.5 சதவீத சரியும் என்று கூறப்படுகிறது.

 

பொருளாதாரம்

ரப்பர் தேவைப்படும் நிறுவனங்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வங்கித் துறைகளின் வருவாய் சேவை மற்றும் என்ஆர்ஐ டெபாசிட்கள் மூலம் தான் என்பதால் பொருளாதாரத்திற்குப் பாதிப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Kerala Floods Effect In Stock Market