விவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்!

இந்தியா முழுவதும் கிராமப்புறங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த குடும்பங்களில் சேமிப்புக் கணக்குகள் அதிகரித்துள்ளதாக நபார்டு வங்கியின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 245 மாவட்டங்களில் உள்ள 2016 கிராமங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. 29 மாநிலங்களைச் சேர்ந்த 1,87, 518 பேரின் விவரங்கள் மூலம் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடன் நிலுவை

இந்தியாவின் கிராமப்புறங்களில் இடர்பாட்டுக் கடன்களைப் பெற்ற 52.5 சதவீதம் பேர் திரும்பச் செலுத்தவில்லை என்றும், இதில் 42.8 விழுக்காட்டினர் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத குடும்பங்கள் என்றும் கூறியுள்ளது. 47.4 சதவீதம் பேர் எதிர்பாராத கடன்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்குகள்

கிராமப்புறங்களைச் சேர்ந்த 88.1 சதவீதம் பேர் வங்கி வாடிக்கையாளர்களாக உள்ளனர். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 55 சதவீதம் பேரும் வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் ஒரு சேமிப்பைக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

காப்பீடு சந்தாதார்கள்

விவசாயம் சார்ந்து இருக்கக்கூடியவர்களில் 26 விழுக்காட்டினர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாயம் சாராத 25 சதவீதம் பேர் காப்பீட்டுத் திட்டங்களில் சந்தாதார்களாக உள்ளனர்.

விவசாயிகள் வருவாய் வளர்ச்சி

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் நபார்டு வங்கியின் சர்வேயில் விவசாயக் குடும்பங்களில் வருமானம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

There is no shortage of farmers in NABARD.