இனி மன நோயும் சுகாதாரக் காப்பீட்டில் அடங்கும்.. ஐஆர்டிஏஐ அறிவிப்பு..!

மனநல சுகாதாரச் சட்டம் 2017 அமலாக்கம் செய்யப்பட்டு 3 மாதம் முழுமையாக முடிந்த நிலையில், இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அமைப்பு, இனி சுகாதாரக் காப்பீட்டில் மன நோயும் அடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் மன நோய்க்குச் செய்யப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளையும் இனி மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்படும்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி ஐஆர்டிஏஐ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இனி உடல் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை செலவுகளை மருத்துவக் காப்பீட்டில் சேவை அளிப்பதைப் போலவே இனி மன நோய்களும், மன நோய்க்கான சிகிச்சைக்கும் உடனடியாக மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மனநல சுகாதாரச் சட்டம் 2017 மே 29ஆம் தேதி அமலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புதிய அறிவிப்பின் மூலம் சுமார் 15 கோடி மக்களுக்கு இதன் மூலம் நன்மை அடைவார்கள்.

Have a great day!
Read more...

English Summary

Health Insurance To Now Cover Mental Illness: IRDAI