வருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா?

2017-2018-ல் வருமான வரி வசூல் 10.03 லட்சம் கோடியாக அதிகரித்துப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

2016-2017 -ல் 5.61 கோடி நபர்கள் வருமான வரி செலுத்திய நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 1.31 கோடி நபர்கள் அதிகரித்து 6.92 கோடி நபர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

2017-2018-ல் 1.06 கோடி நபர்கள் புதியதாக வரி தாக்கல் செய்த நிலையில் 2018-2019-ல் 1.25 கோடி நபர்களைக் கூடுதலாக வருமான வரி செலுத்த வைப்பதை இலக்காக வைத்துள்ளனர். இதுவே வட கிழக்குப் பகுதியில் இருந்து 1.89 லட்சம் நபர்கள் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர்.

வட கிழக்குப் பகுதியில் சென்ற ஆண்டு 6,082 கோடி ரூபாய் நேரடி வருமான வரி வசூல் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு 7,094 கோடி ரூபாயாக வரி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2018-2019 ஆண்டில் சென்ற ஆண்டினை விட 17.75 சதவீதம் கூடுதல் என 8,357 கோடி ரூபாய் நேரடி வசூல் பெறுவதை இலக்காக வைத்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Income Tax Collection At Record Rs 10.03 Lakh Crore