ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 70.40 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி மூலம் மட்டுமே ஈடு செய்து வரும் நிலையில் இதற்கு இந்திய வெளிநாடுகளுக்கு டாலர் மதிப்பில் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்த இந்தச் சூழ்நிஸையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான கச்சா எண்ணெய் செலவிற்கு இந்தியா கூடுதலாக 26 பில்லியன் டாலர் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி மூலம் மட்டுமே ஈடு செய்கிறோம். 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 220.43 மில்லியன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இதற்கு இந்திய அரசு சுமார் 87.7 பில்லியன் டாலர் தொகை செலுத்தியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.65 லட்சம் கோடி ரூபாய்.

மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் தேவை 227 மில்லியன் டன்னாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் மத்திய அரசு அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு சுமார் 108 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவிடும் நிலை உருவாகியுள்ளது.

Read more about: oil rupee import dollar
Have a great day!
Read more...

English Summary

India’s Oil Import Bill Likely To Jump By $26 Billion On Rupee Woes