பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..! யார் இவர்?

இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப்பறக்கும் பிளிப்கார்ட். பே.டி.எம் உள்ளிட்ட நிறுவனங்களைப் போலத் தொடங்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கவே நமக்கெல்லாம் மலைப்பாகத்தான் இருக்கும். ஆனால் கல்லூரிப் பாடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய ஒரு குறும்புக்கார இளைஞன், அது சாத்தியமானதுதான் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறான்.

24 வயதே ஆன ரித்தேஷ் அகர்வால் தான் அந்த இளைஞர். ஓயோ என்ற உணவகத்தின் உரிமையாளர். இந்தியாவில் பல கிளைகளுடன் உருவாகி வரும் அகர்வாலின் கதை நம்ப முடியாதது.

தூண்டுதல் ஒரு டிவி ரிமோட்

ரித்தேஷ் அகர்வாலுக்குச் சொந்த ஊர் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிஸ்ஸாம் கட்டாக். நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. டி.வி ரிமோட்டால் ஈர்க்கப்பட்ட அகர்வாலுக்கு, ஓயோ உணவகம் உருவாவதற்கும் அதுதான் காரணமாக இருந்திருக்கிறது.

படிப்பை கைவிட்ட குழு

அகர்வால் கொஞ்சம் வித்தியாசமானவர். ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி உள்ளிட்ட படிப்புகளைப் பாதியில் கைவிட்டவர்களுக்குத் தலைமை தாங்குகிறார். கல்லூரியிலிருந்து வெளியேறியவர்கள் சுமார்ட்டாக இருப்பதாகக் கூறும் அகல்வால், அடுத்தச் சில ஆண்டுகளில் புத்திசாலியான டிராப் அவுட்கள் கிடைப்பார்கள் என்கிறார்.

மொபைல் சிம் விற்பனை

பள்ளியில் படிக்கும்போதே கைச் செலவுக்காக மொபைல் சிம்கார்டுகளை விற்று வந்த அகர்வால், 22 வது வயதில் ஒரு மில்லியனராக வளர்ந்தார். பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வை எழுதாமல், தொழில் தொடங்குவதற்காக 2011 ஆம் ஆண்டு டெல்லியில் குடியேறினார்.

தொடக்க நிதி

யூனிவர்சிட்டி ஆப் லண்டன் இந்தியன் வளாகத்தில் பதிவு செய்தார். 18 வயதாக இருக்கும்போது, வீட்டு பரிவர்த்தனைக்கு உதவும் ஏர்பிஎன்பி என்ற போர்ட்டலுடன், ஆராவெல் ஸ்டேஷை நிறுவினார். பின்னர் வென்ச்சர் நர்சரி என்ற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு மும்பைக்குச் சென்ற அகர்வால், மூன்று மாத புரோக்கிராமுக்கு பிறகு 30 லட்சம் ரூபாயை பெற்றார்.

முதலீட்டாளருடன் சந்திப்பு

2014 ஆம் ஆண்டு முதலீட்டாளர் சோமையாவை சந்தித்துப் பேசினார். அவரால் ஈர்க்கப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த இளைஞன் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி ஓடினான்.

பன்முகத் திறமை

அகர்வால் ஓட்டல் தொழிலில் பல்வேறு உத்திகளையும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார். ஒரு வெற்றிகரமான வழியைப் பின்பற்றினார். ஆரம்பத்தில் குர்கானில் ஓட்டலை தொடங்கினார். அப்போது துப்புரவு வேலைகளையும், விற்பனையையும் அவரே கவனித்துக் கொண்டு செயல் தலைவராகவும் இருந்தார். இதுதான் அகர்வாலின் கதை.

Have a great day!
Read more...

English Summary

This 24 yr old runs India's largest hotel business