இந்தியாவை மையங்கொண்டுள்ள பேரழிவு - களப்பலி ஆகப்போகும் 16,000 உயிர்கள்

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரள மாநிலம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் நடைபெறவுள்ள இயற்கை சீற்றங்களால் 16,000 பேர் உயிரோடு புதைக்கப்படுவார்கள் என்றும், உடைமைகளின் இழப்பு 47 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் இடர்ப்பாடு தொடர்பான மதிப்பீடுகளை உள்துறை அமைச்சகம் அண்மையில் நடத்தியது.

வீரியமான பேரழிவு

எதிர்காலத்தில் இயற்கை பேரழிவின் வீரியம் கடுமையானதாக இருக்கும் என இந்தியாவின் நவீன செயற்கைக்கோள் அளித்த தகவலை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாவ், எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகள் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறது.

மையம் கொண்டுள்ள ஆபத்து

இயற்கை பேரிழப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பேரிடர் நிவாரணம், புனரமைப்பு பணி உள்ளிட்ட கருத்துருக்களை முன்வைத்து, நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், இயக்கை பேரிழிவுகளை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் பல்வேறு பரிமாணங்களில் இந்தியாவின் தரைதளத்தில் ஆபத்துக்கள் மையம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பறிபோகும் 16000 உயிர்கள்

குஜராத் மாநிலத்தில் இயற்கை பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொடர்ச்சியான நடவடிக்கை இல்லை என்றும் கூறியுள்ள தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிகழப் போகிற பேரழிவில் 16 உயிர்கள் போறிபோகும் என்று எச்சரித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

More than 16,000 could perish in floods in next 10 years: NDMA