கிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..!

சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ், நிதி பிரிமாற்ற சேவை மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அலிபாபா இதுநாள் வரையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தேடிப்பிடித்து முதலீடு செய்து வந்த நிலையில் தற்போது பெரிய நிறுவனங்களைக் குறிவைத்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

இந்நிலையில் தற்போது அலிபாபா இந்தியாவில் ரிலையன்ஸ், டாடா குரூப், ப்யூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அலிபாபா

சீனாவில் அலிபாபா பேமெண்ட், சப்ளை செயின், ஆப்லைன் ரீடைல் என ஓம்னி சேனல் தளத்தை மிகவும் சிறப்பான முறையில் அமைத்துள்ளது. இதே போன்ற தளத்தை இந்தியாவிலும் அமைத்திட வேண்டும் என்ற தற்போது அலிபாபா திட்டமிட்டு வருகிறது.

முக்கியப் பிரச்சனை

கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் இருக்கும் ஆன்லைன் விற்பனையாளர்கள் ஆப்லைன் சந்தை உதவியில்லாமல் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த முடியவில்லை. இது அமேசான், மின்திரா, ஊனிக் துவங்கி அர்பன் லேடர், பெப்பர் பிரை நிறுவனம் வரையில் உள்ளது.

ஆஸ்தான கடைகள்

மேலே குறிப்பிட்டுள்ள சில நிறுவனங்கள் தற்போது பிரச்சனையை உணர்ந்து முக்கிய வர்த்தகச் சந்தையில் ஆஸ்தான கடைகளைத் திறந்துள்ளது.

வாய்ப்பு

இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தான் தற்போது அலிபாபா நாட்டில் இருக்கும் முன்னணி ஆப்லைன் சூப்பர்மார்கெட் நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீடைல், டாடா குரூப், பியூச்சர் ரீடைல் நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Alibaba eyes investment in Reliance, Tata, Future Group