விரைவில் விமான எரிபொருள் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வாய்ப்பு.. ஜெட் ஏர்வேஸ் நிம்மதி..!

நிதி அமைச்சகம் விமான எரிபொருளினை விரைவில் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் கீழ் கொண்டு வருவது குறித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினை அடுத்து வேகமாக விமான எரிபொருளினை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர கோரிக்கையினை வைத்துள்ளன.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இது குறித்துக் கேட்ட போது விமான எரி பொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வருவதில் சில மாநிலங்களுக்குச் சிக்கல் உள்ளதாகவும் அதற்கான தீர்வினை நிதி அமைச்சகம் அளித்த உடன் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஜிஎஸ்டி கவுன்சில்

எனவே விமான எரி பொருளினை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வருவதை அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில் 60 ம் உத ல்65 சதவீதம் எரி பொருளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மாநிலங்களுக்கு எல்லாம் சிக்கல்?

அசாம், ஒதிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிகளவில் சிறிய விமான நிலையங்கள் உள்ளன. இங்கு எல்லாம் ரயில் சென்று வர நீண்டு நேரம் தேவைப்படுவதால் விமானப் போக்குவரத்து அதிகளிவில் உள்ளது.விமான எரிபொருள் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்பட்டால் இந்த மாநிலங்களின் வருவாய்ப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

விமான நிறுவனங்களுக்கு ஜாக்பாட்

ஜிஎஸ்டி கீழ் விமான எரிபொருள் கொண்டு வரப்பட்டால் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 3000 முதல் 5000 கோடி வரை உள்ளிட்டு வரிக் கிரெடிட் கிடைக்கும்.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சென்ற வாரம் தங்களது 2018-2019 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கை வெளியீட்டினை ஒத்தி வைத்துள்ள நிலையில் அது ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை நிலவரம்

தற்போது விமான எரி பொருள் 1 கிலோ லிட்டர் சென்னையில் 69.948 ரூபாய் என்றும், டெல்லியில் 693090 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 68.791 ரூபாய் என்றும், மும்பையில் 69.948 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் & டீசல்

நீண்ட காலமாகவே விமான எரி பொருள் மட்டும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவையும் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு நிலுவையில் உளது.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது?

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Big relief for airlines? Government mulls bringing Aviation Turbine Fuel under GST