10 மாதங்களில் 47 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம்!

2017 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான 10 மாதங்களில் 47 லட்சத்து 13 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதற்கான ஊதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.

2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 மே மாதம் வரை, 44 லட்சத்து 74 ஆயிரத்திரத்து 39 லட்சத்து 20 ஆயிரமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊதிய தரவுகளில், செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டங்களில் 44 லட்சத்து 74 ஆயிரம் பேர் வருங்கால வைப்புநிதி, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களில் பதிவு செய்து பயனடைந்துள்ளதாகக் கூறியுள்ளது

ஜூன் மாதத்ததில் 7,93,108 புதிய உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 18 லிருந்து 21 வயது வரை உள்ள 2,53,466 பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 22 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க 22,05,177 பேர் பதிவு செய்துள்ளதாக அந்தத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

EPFO payroll data: 47 lakh jobs created in 10 months till June