17 வருடம் பணியாற்றிய உயர் அதிகாரி திடீர் ராஜினாமா.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..!

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இன் தலைமை நிதியியல் அதிகாரியான எம்டி ரங்கநாத் சுமார் 17 வருடம் இந்நிறுவனத்திலேயே பணியாற்றித் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ராஜிவ் பன்சால்

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜிவ் பன்சால் வெளியேறி பின்பு இப்பதிவியில் இருந்து 2015ஆம் ஆண்டு வெளியேறிய பின்பு இன்போசிஸின் ஒட்டுமொத்த நிதியியல் நிர்வாகக்தை கையில் எடுத்துக்கொண்ட ரங்கநாத், இப்பதவியேற்றிய 3 வருடத்தில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிர்ச்சி

ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வரும் நிலையில், தற்போது உயர் அதிகாரிகளின் வெளியேற்றம் இந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சலில் பாரிக்

மேலும் இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகச் சலில் பாரிக் பதவியேற்றி பின்பு இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரி ரங்கநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா காரணம்

இதுமட்டும் அல்லாமல் ரங்கநாத் தனது துறையில் புதிய பிரிவுகளில் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்து இப்பணியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இவரது ராஜினாமாவை இன்போசிஸ் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

பல்வேறு காரணங்களுக்காகத் தற்போது இந்திய ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். இது இன்போசிஸ், சிடிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நிறுவனங்கள்

ஜூன் காலாண்டில் இன்போசிஸ், காக்னிசென்ட் நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் அளவு 20 சதவீதமாக உள்ளது. இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5இல் 1 பங்கு ஊழியர்களைப் பாதிக்கும்.

இது இந்நிறுவன வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இதேபோல் விப்ரோ-வின் வெளியேறும் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், டிசிஎஸ் நிறுவனத்தில் 10.9 சதவீதமாக உள்ளது. மேலும் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 22 சதவீதமாக உள்ளது.

 

 

பதவி உயர்வு, சம்பளம் உயர்வு

ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு அதிகப்படியான அல்லது பிற நிறுவனங்கள் அளிக்கும் சம்பளத்திற்கு இணையான ஒரு சம்பளத்தை அளிக்க ஐடி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் அளிக்கவும் தயாராக உள்ளது. இதில் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று.

 

Have a great day!
Read more...

English Summary

Infosys CFO MD Ranganath steps down after 17 years