ரூ.200 கோடி முதலீடு செய்யும் லைப்ஸ்டைல்..!

நாட்டின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான லைப்ஸ்டைல் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அடுத்த 1.5 வருடத்தில் 20 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

20 கடைகளைத் திறக்கும் இந்நிறுவன திட்டத்திற்காகச் சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய லைப்ஸ்டைல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2018-19ஆம் நிதியாண்டில் 16-18 சதவீதம் வரையில் உயர்த்தவும் 4,600 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டவும் முடிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 4,000 கோடி ரூபாய்.

தற்போது இந்தியாவில் சுமார் 75 கடைகளை வைத்து வர்த்தகம் செய்து வரும் லைப்ஸ்டைல் நிறுவனம் இதன் எண்ணிக்கை 105ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்லைஸ்டைல் நிறுவனம் வர்த்தகம் செய்யும் நகரங்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.

Read more about: retail ரீடைல்

Have a great day!
Read more...

English Summary

Lifestyle to invest up to ₹ 200 crore to open 20 stores