வங்கி பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்குச் செக்.. துப்பாக்கிகளுடன் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி!

வங்கி தானியங்கி நடுவங்களில் பணம் நிரப்பும் தனியார் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் 6 மணிக்கு மேலும் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பக்கூடாது என எச்சரித்துள்ளது.

அடுத்த ஆண்டுப் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்கம், விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ரூ.15,000 கோடி

நாடு முழுவதும் தினந்தோறும் நிதிச் சேவை நிறுவனங்களின் 8 ஆயிரம் வேன்கள் பணம் நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு 15000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் ஏ.டி.எம்களில் நிரப்பப்படுகின்றன. நள்ளிரவு நேரங்களிலும் பணம் நிரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அசாதாரண நிகழ்வுகள்

வங்கிக் கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை வழிமறித்துப் பணத்தைக் கொள்ளையடிக்கும் நிகழ்வுகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

விதிமுறைகள்

நகர்ப்புறங்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என நிதிச் சேவை நிறுவனங்களுக்கு எச்சரித்துள்ள உள்துறை அமைச்சகம், கிராமப்புறங்களில் 6 மணிக்கு மேல் நிரப்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்றும், அதற்கான பணத்தை வங்கிகளிடம் முற்பகலுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

பாதுகாப்பு பணி

நிதிச் சேவை நிறுவனங்களின் வேன்களில் பயிற்சி பெற்ற 2 ஊழியர்கள், ஒரு டிரைவர், ஆயுதங்களைக் கொண்ட காவலர்கள் 2 பேர் இருக்க வேண்டும், காவலர்கள் ஆயுதங்களுடன் வேனின் முன்புறத்தில் அமர வேண்டும். உணவு மற்றும் தேநீர் வேளைகளின் போது கட்டாயம் ஒரு காவலர் வேனை பாதுகாக்க வேண்டும்.

ஜி.பி.எஸ் கருவி

பணம் கொண்டு செல்லும் நிதிச்சேவை நிறுவனங்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும் என்றும், ஒரு தடவைக்கு 5 கோடி ரூபாய் மட்டும் எடுத்துச் செல்ல் வேண்டும்.

தீயணைப்பு உபகரணங்கள்

வேன்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இணைக்க வேண்டும். முன்பக்கம், மற்றும் பக்கவாட்டு மற்றும் உட்புறங்களில் பொருத்த வேண்டும். அவசர உதவிக்குப் பயன்படும் லைட் மற்றும் தீயணைப்பு உபகரங்கள் இருக்க வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

Ministry of Internal Affairs permits To Use Gun Against Bank robbery