வரலாறு காணாத உச்சத்தில் ரிலையன்ஸ் பங்குகள்.. என்ன காரணம்..?

சீனாவின் அலிபாபா நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது. இந்தச் செய்தி முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான ஊக்குவிப்பை அளித்த காரணத்தால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்தது.

Advertisement

கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் அலிபாபா நிறுவனத்தை வழிநடத்தி இந்த முதலீட்டில் திட்டத்தைப் பேச்சுவார்த்தைக்கு நகர்த்தியுள்ளது.

Advertisement


இதன் எதிரொலியாக மாதம் முழுவதும் 7.7 மில்லியன் ரிலையன்ஸ் பங்குகள் வர்த்தகம் ஆகும் நிலையில், இன்று ஒரு நாள் மாட்டும் சுமார் 4.9 மில்லியன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அதீத முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்தின் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று அதிகப்படியாக 2.65 சதவீதம் வரையில் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 1,236.80 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

English Summary

Reliance Industries shares hit record high on Alibaba JV reports
Advertisement